இரத்த சோகை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்


மனிதர்களுக்கு இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைவாக இருந்தால் இரத்த சோகை ஏற்படும். இரத்த சிவப்பு அணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் இரும்புச் சத்து நிறைந்தது. இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் நம் உடம்பால் ஹீமோகுளோபினை உற்பத்தி செய்ய முடியாது. அதனால் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைகிறது. இரத்த சோகை உள்ளவர்கள் இரும்புச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதைத்தவிர மேலும் இரத்தச் சிவப்பு அணுக்கள் அதிகரிக்க சில வைட்டமீன்களும் நம் உடலுக்கு தேவைப்படுகிறது. இரும்புச்சத்தானது கறி, கோழி, கடல் உணவுகள் போன்ற அசைவ உணவகளிலும் சைவ உணவுகளிலும் மிகுந்துள்ளது. இரத்த சோகை உள்ளவர்கள் முதலில் டாக்டரின் ஆலோசனைக்கேற்ப மருந்து வகைகளை எடுத்துக் கொண்டு மேலும் இரும்புச்சத்து நிறைந்துள்ள உணவு வகைகளையும் சாப்பிட வேண்டும்.





இரத்தச் சிவப்பு அணுக்களை அதிகரிக்க நாம் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்

கீரைகள் சாப்பாட்டில் கீரைகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பேரிச்சம்பழம்

கீன்வா

முந்திரிபருப்பு

பிஸ்தாபருப்பு

பூசணிவிதைகள்

பீன்ஸ் வகைகளான சோயா பீன்ஸ்,பச்சை பட்டாணி ,ராஸ்மா, கொண்டைக்கடலை

கடல் உணவுகள்

ஆட்டு ஈரல், சுவரொட்டி

இவைகளைத் தவிர கால்சியம் சத்து அதிகம் நிறைந்த பால், தயிர், பன்னீர், சீஸ். பிராக்கோலி முதலியவற்றையும் நாம் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.











இரத்த சோகை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்    இரத்த சோகை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள் Reviewed by Latha Gopinath on July 14, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.