உடல் பருமனை குறைக்க முக்கியமாக தேவைப்படுகின்ற சாப்பாட்டு வகைகள்



உடல் பருமன் என்பது பல மக்களுக்கு பெரும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. உடல் எடையைக் குறைக்க மக்கள் பல வழிகளில் முயன்று வருகிறார்கள். இந்த உடல் பருமன் உள்ளவர்கள் அவர்களுடைய அழகு உடல் பருமனால் குறைவதோடு பல வகையான உடல் உபாதைகளுக்கும் ஆளாகிறார்கள். இதய நோய், இரத்த அழுத்தம், நீரழிவு நோய் மேலும் சில மூச்சுப் பிரச்சனைகள். நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளுள் கலோரிகள் அதிகம் நிறைந்த உணவுகளைத் தவிர்த்து நார்ச்சத்து அதிகம் நிறைந்த சத்துகள் மிகுந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் சில உணவு வகைகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு சாதம் சாப்பிடும் அளவைக் குறைத்து சாதத்திற்கு சமமான அளவு காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும் அவ்வாறே கொடுத்துப் பழக்கப் படுத்த வேண்டும். வாரத்தின் அனைத்து நாட்களும் அரிசி சாப்பாடே சாப்பிடாமல் கீன்வா, ஓட்ஸ், கோதுமை சேர்த்த உணவுகளையும் சாப்பிட்டு வர வேண்டும். உணவுப்பழக்கத்தை மாற்றுவதோடு சிறுசிறு உடற்பயிற்சிகளையும் நாம் தினமும் செய்து வர வேண்டும். உதாரணத்திற்கு வாக்கிங், ஜாக்கிங், யோகா மற்றும் வேறு சில உடற்பயிற்சிகளையும் நாம் தினமும் செய்து வர வேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அன்றாடம் செய்து வந்தாலே போதுமானது.
இப்போது நாம் அதிக பசியை குறைத்து கலோரிகளை நீக்கி உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகளைப் பார்ப்போம்.







உடல் எடையை குறைக்கும் 25 உணவு வகைகள்

பச்சைக்காய்கறிகளான கீரை, பிராக்கோலி, முட்டைகோஸ், காலிபிளவர்

முட்டை

சால்மன் மீன்

அவக்கொடா

ஆப்பிள் சைடர் வினிகர்

சியா விதைகள்

ஓட்ஸ், கீன்வா

பாதாம்பருப்பு

பீன்ஸ்

பிரவுன் ரைஸ்

கொண்டைக்கடலை

க்ரீண் டீ

ஆலி விதைகள்

கிட்னி பீன்ஸ்

எலுமிச்சம்பழம்

உருளைக்கிழங்கு

பருப்பு வகைகள்

பிஸ்தாபருப்பு

பாப்கான்

தேங்காய் எண்ணெய்

சிக்கன் நெஞ்சுக்கறி

சூப் வகைகள்

பன்னீர்

பச்சைமிளகாய்

தயிர்











உடல் பருமனை குறைக்க முக்கியமாக தேவைப்படுகின்ற சாப்பாட்டு வகைகள்                உடல் பருமனை குறைக்க முக்கியமாக தேவைப்படுகின்ற சாப்பாட்டு வகைகள் Reviewed by Latha Gopinath on July 14, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.