தேங்காய் மக்களால் அதிகம் விரும்பப் பட்டு வரும் ஒரு பொருள். தென்னிந்திய சமையலில் அனைவரது வீடுகளிலும் தேங்காய் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குழம்பு, கூட்டு, பொரியல், அவியல், துவையல், சட்னி, பலகாரங்கள் ஆகிய அனைத்திலும் நாம் தினமும் தேங்காயை எடுத்துக் கொண்டு வருகிறோம். அதைத்தவிர தேங்காய் லட்டு, தேங்காய் பர்பி, தேங்காய் மிட்டாய் போன்ற இனிப்பு பலகாரங்களும் நாம் ருசியாக தினமும் செய்து சாப்பிட்டு வருகிறோம். மேலும் தேங்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. அத்துடன் அதில் இரும்புச்சத்து, மினரல்கள் மற்றும் வைட்டமின் சத்துக்களும் உள்ளது. தேங்காய் எண்ணெய்யும் நமக்கு பல நன்மைகளைக் கொடுத்து வருகிறது. மக்கள் தினமும் தங்கள் தலைமுடிக்கும், கை, கால்களுக்கும் தேங்காய் எண்ணெய்யை விரும்பி தடவி வருகிறார்கள். மேலும் தேங்காயிலிருந்து தேங்காய் பால் எடுத்து அதையும் மக்கள் தினமும் பல ரெசிபிகளுக்கு உபயோகித்து வருகிறார்கள். தேங்காய் பாலை இடியாப்பம், ஆப்பம் ஆகியவற்றோடு சேர்த்து சாப்பிடலாம். தேங்காய் பாலை தொடர்ந்து குடித்து வந்தால் வயிற்றுப்புண், குடல்புண் ஆகிய இரண்டும் சரியாகிவிடும்.
தேங்காய் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்
சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது
தேங்காய் சாப்பிடுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும்.
கொலஸ்ரால்
தேங்காய் உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்புகளைக் கூட்டுகிறது.
செரிமானம்
தேங்காயில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் அது எளிதில் ஜீரணம் ஆக உதவு செய்கிறது.
உடல் எடை குறையும்
தேங்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் சீக்கிரமாகவே நமக்கு வயிறு நிரம்பி விடும். அதனால் கூடுதலாக நாம் சாப்பாடு சாப்பிட மாட்டோம். ஆகவே தேங்காய் உபயோகத்தினால் நமக்கு உடல் எடை குறையும். மேலும் தொடர்ந்து தேங்காயை சாப்பிட்டு வந்தால் அது நம் உடல் எடையை கூட விடாமல் கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவி செய்கிறது.
தேங்காயை மக்கள் ஏன் அன்றாடம் உணவில் விரும்பி சேர்த்துக் கொள்கிறார்கள்
Reviewed by Latha Gopinath
on
July 14, 2019
Rating:
Reviewed by Latha Gopinath
on
July 14, 2019
Rating:

No comments: