அதிகமான சோகம், நம்பிக்கை இன்மை, வாழ்க்கையில் வாழ விருப்பம் இல்லாமை இத்தகைய காரணங்களால் தான் மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் எதிர்பாரத இழப்பு,, வாழ்க்கை மாற்றம், ஏமாற்றம் இது மாதிரி ஏதாவது தப்பாக நடந்தால் அதிகமான துயரத்திற்கு ஆளாவர்கள். சில வருடங்களுக்கு அந்த வருத்தம் இருக்கும். படிப்படியாக அந்த வருத்தம் குறைந்தாலும் ஒரு சில நாட்கள், ஒரு சில பொருள்கள் அதை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும்.
மன அழுத்தம் என்பது அவ்வளவு பெரிய பிரச்சனை கிடையாது. பொதுவான ஒரு விசயமே. மக்களில் மூவரில் ஒருத்தர்க்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும். ஒருத்தர்க்கு கம்மியாக இருக்கும் ஒருத்தர்க்கு அளவாக இருக்கும்.
மன அழுத்தம் எதனால் வருகிறது
அது முதலில் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து வருகிறது. அதாவது அப்பாவுக்கு இருந்தால் மகனுக்கோ மகளுக்கோ வரும்.
இரண்டாவது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களால் மனஅழுத்தம் வரும். பொருளாதார பிரச்சனை இருந்தாலோ, வேலை கிடைக்காமல் இருந்தாலோ, தனிமையில் இருந்தாலோ, இல்லை நமக்கு பிடித்த நபரையோ, பொருளையோ இழந்தாலோ, குழந்தை பிறக்கும் சமயங்களில் கூட வர வாய்ப்பு உள்ளது.
மூன்றாவது உடம்பில் ஏதாவது பிரச்சனை இருந்தாலோ, அல்லது நோய் இருந்தாலோ வரும்.
நான்காவது ஒரு மனிதனின் இயற்கை குணமே அப்படியாகத்தான் இருக்கும். எதையும் தவறாகத்தான் பார்ப்பான், தவறான விசயங்கள்தான் நடக்கிறது என்று நம்புவான். தவறான விசயங்களைத்தான் பேசுவான்.
மன அழுத்தத்திலிருந்து எப்படி வெளிவருவது
முதலில் தப்பான நினைப்புக்களை கட்டுப்படுத்த வேண்டும்.
எதற்கு எடுத்தாலும் கவலைப் பட்டுக் கொண்டே இருக்கக் கூடாது..
.எதிலும் நம்பிக்கை வேண்டும். நல்லது நடக்கும் என்று நம்ப வேண்டும்.
கவனக்குறைவு இல்லாமல் இருக்க முயற்சி பண்ண வேண்டும்.
சுறுசுறுப்பாக நம்மை வைத்துக் கொள்ள வேண்டும்.
மன அழுத்தம் இருக்கும் போது தனியாக இருக்கக் கூடாது. மற்றவர்களுடைய சிந்தனைகளையும் பேச்சுக்களையும் கேட்டு அதையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நமக்கு பிடித்த விசயங்களையே செய்ய வேண்டும். சமைக்கப் பிடித்தால் சமைப்பது, பாட்டு கேட்கப்பிடித்தால் பாட்டு கேட்பது, நண்பர்களுடன் நேரம் செலவழிக்கப் பிடித்தால் அவ்வாறே செய்ய வேண்டும்.
நகைச்சுவை உணர்வுடன் வாழ வேண்டும். நகைச்சுவையான படங்கள் பார்ப்பது, நகைச்சுவையாக பேசுவது இது போன்று செய்ய வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனையை கேட்டுப் பெறுவது மிக முக்கியமானது.
மன அழுத்தம் என்றால் என்ன & அது எப்படி வருகிறது & அதிலிருந்து எப்படி விடுபட்டு வருவது
Reviewed by Latha Gopinath
on
July 14, 2019
Rating:
No comments: