தயிர் என்பது பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் தயிர் மிகப்பிரபலமானது. தயிரை மக்கள் பல வழிகளில் பயன்படுத்துகிறார்கள். தயிர் இல்லாத வீடே கிடையாது. எந்த வகையான குழம்பு வைத்து சாப்பாடு சாப்பிட்டாலும் கடைசியில் சிறிது தயிர் சாதம் சாப்பிட்டு முடிப்பது நமது வழக்கம். லெசி, தயிர் பச்சடி, மோர், மோர் குழம்பு, தயிர் வடை முதலிய பல சுவையான ரெசிபிகள் தயிர் மற்றும் மோரிலிருந்து தயாரிக்கப்படுகிறது. தயிரை மக்கள் விரும்பி சாப்பிடுவதற்கு அதன் சுவை நன்மைகள் முதலியன இரு முக்கிய காரணங்களாக உள்ளன.
தயிரில் அதிக அளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. அது பாலில் இருந்து கிடைப்பதால் அதில் புரதச்சத்து அதிகம் உள்ளது. மக்கள் பல வருடங்களுக்கு முன்னரே தயிர் செய்யும் முறையை கண்டறிந்துவிட்டனர். தினந்தோறும் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் தயிர் செய்து உண்டு வருகிறார்கள்.
தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
எலும்புகளுக்கும் பற்களுக்கும் நல்லது
தயிர் பாலில் இருந்து தயாரிக்கப்படுவதால் அதில் அதிக அளவு கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இந்த கால்சியம் சத்தானது நம் உடம்பில் பற்களுக்கும், எலும்புகளுக்கும் மிக முக்கிய சத்தாக விளங்குகிறது.
பசியைக் கட்டுப்படுத்துகிறது
புரதச்சத்து அதிதம் நிறைந்துள்ளதால் தயிர் நம் உடம்பில் உள்ள கலோரிகளை குறைக்க உதவுகிறது.
உடல் எடையை குறைக்கிறது
அத்துடன் பசியையும் கட்டுப்படுத்துகிறது. அதனால் தயிர் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையவும் வாய்ப்பு உள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தியை கூட்டுகிறது
உடம்பில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை கூட்டுகிறது. அதனால் மனிதர்கள் நோய் வாய்ப்படும் அபாயம் குறைகிறது.
ஜீரணசக்தி மற்றும் மலச்சிக்கல்
ஜீரணச்சக்தியை அதிகரிப்பதுடன் மலச்சிக்கலையும் நீக்குகிறது.
உடல் சூட்டை குறைக்கிறது
தயிரை தினசரி நாம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறைகிறது.
இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது
இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.
குழந்தைகளுக்கும் தயிர் கொடுக்கலாம்
குழந்தைகளுக்கும் தயிர் கொடுக்கலாம். அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். சிறு வயதில் இருந்தே தயிர் சாப்பிடுவதால் பற்களும், எலும்புகளும் நன்கு வலுவடையும்.
தயிரை ஏன் மக்கள் விரும்பி சாப்பாட்டில் சேர்த்துக் கொள்கிறார்கள்
Reviewed by Latha Gopinath
on
July 14, 2019
Rating:
Reviewed by Latha Gopinath
on
July 14, 2019
Rating:

No comments: