சர்க்கரை நோய் வருவதின் முக்கிய காரணங்கள் & சர்க்கரை நோயாளிகள் எந்த மாதிரியான உணவுகளைச் சாப்பிட வேண்டும்
சர்க்கரை நோய் என்பது நம் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது வருகிறது. நம் உடம்பில் சுரக்கும் இன்சுலின் என்ற ஹார்மோன் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. நம் உடம்பில் தேவையான அளவு இன்சுலின் சுரக்காவிட்டாலோ அல்லது சுரக்கும் இன்சுலினை நம் உடம்பால் சரியாக பயன்படுத்த இயலாவிட்டாலோ சர்க்கரை நோய் வருகிறது. இத்தகைய இரு காரணங்களால் சர்க்கரை நோய் இரு பிரிவாக பிரிகிறது. இந்த சர்க்கரை நோயால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த சர்க்கரை நோய் எப்படி வருகிறது என்பதைப் பார்க்கலாம்
சர்க்கரை நோய் வருவதின் முக்கிய காரணங்கள்
சர்க்கரை நோய் வருவதின் முக்கிய காரணம் மரபணு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதாவது ஒரு மனிதனின் இயல்புகளைச் சந்ததியினருக்கு கடத்துவது. மரபணு சம்பந்தப்பட்ட நோய் என்பதால் சர்க்கரை நோய் குடும்பத்தாரிடம் இருந்து வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
இரண்டாவது முக்கிய காரணம் நம்முடைய வாழ்க்கை மாற்றம் நம் உணவு முறைகள். அதிக உடல் பருமன் உள்ளவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் நம் உடலுக்கு பல அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இதய நோய், கண்பார்வை குறைவு, கிட்னி பிரச்சனை முதலியவை.
ஆரோக்யமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதுடன் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளையும் எடுத்துக் கொண்டு வர வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் எந்த மாதிரியான உணவுகளைச் சாப்பிட வேண்டும்
சத்து மிகுந்த உணவுகளைச் சாப்பிடுவதே முக்கிமான ஒன்றாக இருக்கிறது.
சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிட்டால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு வேகமாக கூடுகிறது. அதனால் அவற்றைத் தவிர்த்து புரதச்சத்து மிகுந்த உணவுகளைச் சாப்பிட்டு வருவது நல்லது.
மருத்துவரின் பரிந்துரையின் படி தகுந்த அளவு ஹார்போஹைட்ரேட் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக சத்தான பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொட்டைகள், மீன், கோழி முதலியன.
சர்க்கரை நோய் வருவதின் முக்கிய காரணங்கள் & சர்க்கரை நோயாளிகள் எந்த மாதிரியான உணவுகளைச் சாப்பிட வேண்டும்
Reviewed by Latha Gopinath
on
July 14, 2019
Rating:
No comments: