கொய்யாவின் மருத்துவக் குணங்கள் பெரும்பாலும் அனைவர்க்கும் தெரிந்திருக்கும். ஆனால் கொய்யா இலைகள் பற்றி பலருக்கும் தெரியவில்லை. கொய்யா இலைகளில் பல மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. இயற்கை வலி நிவாரணி. அத்துடன் ஆன்டி – ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. நோய் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றலும் உள்ளது. மருத்துவக் குணங்கள் அதிகம் இருக்கும் இந்த இலையை பல நோய்களை குணமாக்க பயன்படுத்தி வருகிறார்கள். டீ வகைகளை தயாரிக்கவும் கொய்யா இலைகளை பயன்படுத்துகிறார்கள். அதைத்தவிர கொய்யா பழங்களை வைத்து ஜாம், ஜூஸ் சாக்லேட் முதலிய உணவுப் பொருள்களும் தயாரித்து வருகின்றனர். கொய்யாப் பழங்கள் சாப்பிடுவதற்கு மிக ருசியாக இருக்கும். எளிதில் கிடைக்கக் கூடிய பழமாகவும் இருக்கிறது.
கொய்யா இலைகளின் நன்மைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்
ஆன்டி – பாக்டீரியல் நன்மைகள்
நோய் கிருமிகளின் தாக்கத்தை குறைக்க உதவுகிறது. காயங்களை விரைவில் ஆற்றவும் உதவுகிறது.
ஜீரண சக்திக்கு உதவுகிறது
ஜீரண சக்தியை அதிகரிக்க உதவுகிறது. ஆன்டி – பாக்டீரியல் நன்மைகள் மிகுந்திருப்பதால் அது ஜீரண சக்தியை பெருக்க உதவுகிறது. அத்துடன் வாந்தி, வயிற்றுவலி முதலிய பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
பேதியைத் தடுக்கிறது ஜீரண சக்திக்கு உதவுவதுடன் பேதி ஆவதையும் தடுக்கிறது
உடல் எடையை குறைக்க உதவுகிறது
நம் உடலில் உள்ள கலோரிகளை குறைத்து உடல் எடை கூடாமல் ஒரே அளவில் இருக்க உதவுகிறது.
மலச்சிக்கல்
நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால் மலச்சிக்கலைப் போக்குகிறது.
ஆன்டி –ஆக்ஸிடன்ட் நிறைந்தது
ஆன்டி – ஆக்ஸிடன்ட் அதிகம் கொய்யா இலையில் நிறைந்துள்ளது. இந்த ஆன்டி –ஆக்ஸிடன்ட் நம் உடம்பை சில நோய்க் கிருமிகளிலிருந்து பாதுகாக்கிறது.
சர்க்கரை நோய்க்கு தீர்வு
இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதுடன், இன்சுலின் சுரப்பதையும் அதிகரிக்கிறது.
கொலஸ்ராலைக் குறைக்கிறது
கொய்யா இலைகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது.
டெங்கு காய்ச்சலுக்கு மருந்து
டெங்கு காய்ச்சலுக்கு ஒரு இயற்கை மருந்தாக இந்த கொய்யா இலைகள் இருக்கிறது.
தோல் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்குகிறது
கரும்புள்ளிகள், முகப்பரு, மூக்கில் உண்டாகும் கருப்பு ஆகியவற்றைப் போக்குவதற்கு கொய்யா இலைகளை தொடர்ந்து பயன்படுத்தி வரலாம்.
பல் ஊண் வலியை நீக்குகிறது
பல் வலி, பல் ஊண் பிரச்சனைகளுக்கு கொய்யா இலையைப் பயன்படுத்தலாம்.
கேன்சர் நோய்க்கு தீர்வு
ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் ஒரு சில கேன்சர் வகைகளைத் தடுக்க உதவுகிறது.
முடி உதிர்வைக் கட்டுப் படுத்த உதவுகிறது
முடி உதிர்வைத் தடுப்பதுடன் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
கொய்யா இலையில் உள்ள அபார நன்மைகள் & கொய்யா இலையில் உள்ள 13 மருத்துவக் குணங்கள்
Reviewed by Latha Gopinath
on
July 14, 2019
Rating:
No comments: