காபி பெரும்பாலான மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் தவறாமல் காபி குடிக்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. காபியில் கெப்பைன் என்னும் ஒரு முக்கியமான பொருள் இருக்கிறது. அது நம்மை சுறுசுறுப்பாக வேலை செய்ய வைக்கிறது. அத்துடன் புத்துணர்ச்சியையும் தருகிறது.
நம் மனதை சந்தோசமான மனநிலையுடன் இருக்க வைக்கிறது. இந்த காபியை நாம் அளவோடு குடித்து வந்தால் நம் உடலுக்கு எந்தக் கெடுதலும் இல்லை. அதிகமாக காபி குடிப்பதால் கெப்பைனின் தாக்கம் நம் உடலில் அதிகரிக்கிறது. அதனால் நாம் பல்வேறு பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். ஒரு சிலரின் உடம்பு கொஞ்சம் அதிக கெப்பைனை தாங்கக் கூடியதாக இருக்கும். ஆனால் ஒரு சிலரின் உடம்பு ஒரு குறிப்பிட்ட அளவு கெப்பைனை தாங்கக் கூடியதாக இருக்கும். அதனால் குறிப்பிட்ட அளவில் காபியை நாம் எடுத்துக்கொண்டால் கெப்பைனின் பக்கவிளைவிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.
காபி குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள்
பதற்றம்
காபி அதிகம் குடிப்பதால் பதற்றமும், நடுக்கமும் ஏற்படுகிறது
செரிமானப் பிரச்சனை
காபி குடித்தால் நமக்கு ப்ரீயாக காலைக்கடன்கள் வெளியேறிவிடும். அதுவே காபி அதிகமாக குடித்தால் ஒரு சிலருக்கு பேதி ஆவதற்கும் வாய்ப்பு உள்ளது..
காபிக்கு அடிமை ஆதல்
காபி அதிகமாக குடித்தால் நம் உடம்பு அதற்கு அடிமையாகி விடும். அதனால் காபி அதிகம் குடித்தவர்களுக்கு காபி குடிக்காமல் இருந்தால் தலைவலி, உடல் சோர்வு ஆகிய உடல் உபாதைகள் ஏற்படும்.
உடல் சோர்வு
காபியை மக்கள் உடல் புத்துணர்ச்சி அடைவதற்காக பருகி வருகிறார்கள். ஆனால் அந்த கெப்பைன் நம் உடலை விட்டு நீங்கும் போது நாம் அதிகமான உடல் சோர்வுக்கு ஆளாகிவிடுவோம்.
இரத்த அழுத்தம்
காபி அதிகம் குடிப்பதால் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதனால் ஹார்ட் அட்டாக் போன்ற இதய நோய் வரும் அபாயம் உள்ளது. அத்துடன் இதய துடிப்பும் அதிகரிக்கிறது.
குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு
காபி குடிப்பதால் பெரியவர்களுக்கு வரும் பக்க விளைவுகளைக் காட்டிலும் குழந்தைகளுக்கு அதிகபக்க விளைவுகள் ஏற்படும்.
கர்ப்பிணி பெண்களும் பாலூட்டும் பெண்களும் காபி குடிப்பதைக் குறைக்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்களும், பாலூட்டும் பெண்களும் காபி அதிகம் குடிக்கக் கூடாது.
பித்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது
காபி அதிகம் குடித்தால் ஆண் பெண் இரு பாலர்க்கும் பித்தம் வந்து விடும்.
காபி குடிப்பது நல்லதா கெட்டதா & காபி அதிகம் குடிப்பதால் நம் உடலுக்கு ஏற்படும் பக்க விளைவுகள்
Reviewed by Latha Gopinath
on
July 14, 2019
Rating:
Reviewed by Latha Gopinath
on
July 14, 2019
Rating:

No comments: