பேரிச்சம் பழத்தில் உள்ள சத்துக்கள் பேரிச்சம் பழத்தில் உள்ள நன்மைகள்



தித்திப்பான இனிப்பு சுவையுடன் உள்ள பேரிச்சம் பழத்தில் அதிக அளவில் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த பேரிச்சம் பழமானது உலர்ந்த பழமாகத்தான் அதிகம் விற்கப்படுகிறது. பல வகையான பேரிச்சம் பழங்கள் உள்ளன. சிறிய மற்றும் பெரிய அளவில் வெவ்வேறு நிறத்தில் கிடைக்கிறது. இந்த பேரிச்சம் பழத்தில் கலோரிகள் அதிகமாக இருப்பதுடன் நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து முதலிய சத்துகளும் நிறைந்தள்ளன.





பேரிச்சம் பழத்தை எப்படி சாப்பிடுவது

  1. பேரிச்சம் பழத்தை அன்றாட உணவில் நாம் எடுத்துக் கொள்ள பல வழிகள் உண்டு.
  2. இதில் இயற்கையாகவே இனிப்புச் சத்து உள்ளதால் சர்க்கரைக்குப் பதிலாக பல ரெசிபிகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
  3. இனிப்பு வகைகள், ஜூஸ், ஸ்மூத்தி, மில்க் ஷேக் முதலியவற்றில் பயன்படுத்தலாம்.
  4. அதிக அளவில் பேரிச்சம்பழத்தில் கலோரிகள் இருப்பதால் குறிப்பிட்ட அளவு சாப்பிடுவது நல்லது.
பேரிச்சம்பழத்தில் உள்ள 10 நன்மைகள்

  1. பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்துகள் நிறைந்திருப்பதால் அது மலச்சிக்கல் உண்டாவதை தடுக்கிறது.
  2. ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளது.
  3. மூளை செயல்பாட்டிற்கு உதவுகிறது.
  4. இயற்கையாகவே இதில் இனிப்புச் சுவை உள்ளதால் சர்க்கரைக்குப் பதிலாக பயன் படுத்தத் தகுந்தது.
  5. இரத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்குகிறது.
  6. இதில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடம்பிலுள்ள எலும்புகளை வலுவாக்கிறது.
  7. சாதரண பழங்களை விட இதில் அதிக அளவில் சத்துகள் உள்ளன.
  8. உடம்பிலுள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
  9. வைட்டமீன்கள், புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது.
  10. மேலும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.













பேரிச்சம் பழத்தில் உள்ள சத்துக்கள் பேரிச்சம் பழத்தில் உள்ள நன்மைகள் பேரிச்சம் பழத்தில் உள்ள சத்துக்கள் பேரிச்சம் பழத்தில் உள்ள நன்மைகள் Reviewed by Latha Gopinath on June 23, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.