தேன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்


இனிப்புச் சுவையுடன் இருக்கும் இந்தத் தேன் தேனீக்களால் பூக்களில் இருந்து சேகரிக்கப்படுகிறது. இந்தத் தேனை கடவுள் கொடுத்த வரப்பிரசாதம் என்றே கூறலாம். இதை பல வருடங்களாக மக்கள் மருந்தாக பயன்படுத்தி வருகிறார்கள். தேனில் ஏராளமான மருத்துவக் குணங்கள் அடங்கி இருக்கின்றன. கலோரிகள் அதிகம் நிறைந்த இந்தத் தேனில் வைட்டமின், மினரல் முதலிய சத்துக்கள் சிறிது குறைவாகவே உள்ளது. ஆனால் நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் சர்க்கரையை ஒப்பிட்டு பார்க்கும் போது இது மிகச் சுவையாகவும் சத்தான ஒன்றாகவும் இருக்கிறது. எனினும் கலோரிகள் அதிகம் இருப்பதால் நாம் சிறிது கவனமாகவே பயன்படுத்த வேண்டும்



இனி தேனில் உள்ள மருத்துவ குணங்கள் அனைத்தையும் பார்ப்போம்

காயங்களை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. அதனால் இதை தோல் சம்பந்தப்பட்ட ஒரு சில பிரச்சனைக்கு மக்கள் உபயோகப்படுத்துகிறார்கள்.

ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

சளியைக் குறைக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு உண்டாகும் சளியை குறைக்க உதவுகிறது.

உடம்பில் உண்டாகும் கொழுப்பை குறைக்க உதவுகிறது. எனவே உடல் எடையை குறைக்க தொடர்ந்து சாப்பிடலாம்.

நம் தோலை நன்கு ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

உடம்பிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை கூட்டுவதற்கு உதவுகிறது.

தேனை எப்படி சாப்பிடுவது

தேனை வெறும் வயிற்றில் சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

குழந்தைகளுக்கு உண்டாகும் சளிக்கு தேன் கொடுக்கலாம். தொண்டையில் இருக்கும் சளி வெளியேறிவிடும்.















தேன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் தேன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் Reviewed by Latha Gopinath on July 14, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.