வைட்டமின் A எதனால் நம் உடம்பிற்கு தேவைப்படுகிறது & எந்தெந்த உணவுகளில் வைட்டமின் A நிறைந்துள்ளது



நம் உடலுக்கு தேவையான மிக முக்கியமான சத்துக்களுள் இதுவும் ஒன்று. வைட்டமின் A சத்து நம் கண்களுக்கு மிக முக்கியமானது என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த விஷயம். ஆனால் அதைத் தவிர வைட்ட்டமின் A நம் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. வைட்டமின் A உள்ள உணவுகளை நாம் எடுத்துக் கொள்வதன் மூலம் நம் உடலுக்கு அந்த சத்து கிடைக்கிறது. ஆகவே நாம் நம்முடைய தினசரி உணவில் வைட்டமின் A வை நம் உடலுக்கு தேவையான அளவு எடுத்துக் கொள்வது அவசியம். நம் உடலுக்கு தேவையான அளவில் வைட்டமின் A சென்று சேராவிட்டால் வைட்டமின் A குறைபாட்டினால் வரும் பிரச்சனைக்கு நாம் ஆளாவோம்.




நம் உடலுக்கு வைட்டமின் A எதனால் தேவைப்படுகிறது என்பதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்

கண் பார்வை

நம் கண் பார்வையை வலிமையாக்க வைட்டமின் A சத்து உதவுகிறது. இதனால் மாலைக்கண் நோய் வரும் அபாயம் நீங்குகிறது.

நோய் எதிர்ப்புச் சக்தி

வைட்டமின் A சத்து நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

இன பெருக்கத்திற்கு உதவுகிறது

ஆண், பெண் இரு பாலர்க்கும் இன பெருக்கத்திற்கு பெரும் உதவி செய்கிறது.

தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்குகிறது

உதாரணத்திற்கு முகச்சுருக்கம், வயது முதிர்ந்த தோற்றம், முகப்பரு முதலியவை

வைட்டமின் A சத்து நிறைந்துள்ள உணவு வகைகள்

காரட்

கீரைகள்

சிகப்பு குடைமிளகாய்

சீனிக்கிழங்கு

ஈரல்

பிராக்கோலி

மாம்பழம்

தர்பூசணிப்பழம்

பப்பாளிப்பழம்

கொய்யாப்பழம்











வைட்டமின் A எதனால் நம் உடம்பிற்கு தேவைப்படுகிறது & எந்தெந்த உணவுகளில் வைட்டமின் A நிறைந்துள்ளது வைட்டமின் A எதனால் நம் உடம்பிற்கு தேவைப்படுகிறது  &  எந்தெந்த உணவுகளில் வைட்டமின் A  நிறைந்துள்ளது Reviewed by Latha Gopinath on July 14, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.