கற்றாழை நமக்கு கடவுள் கொடுத்த ஒரு வரப்பிரசாதம்|கற்றாழையில் உள்ள ஏகப்பட்ட மருத்துவ குணங்கள்



கற்றாழை ஒரு மிகப்பிரபலமான மருத்துவ குணங்கள் நிறைந்த செடி. இந்த கற்றாழையின் இலைகள் தடிமனாக இருக்கும். ஏனென்றால் இந்த கற்றாழையின் இலையில் தான் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. கற்றாழையின் நடுவில் இருக்கும் சதை போன்ற பகுதியை வைத்து தான் பல பொருள்கள் தயாரிக்கப்படுகிறது. அழகு சாதனப்பொருள்கள், சாப்பாட்டுப்பொருள்கள் மற்றும் மருந்து சார்ந்த பொருள்கள். ஆயிரக் கணக்கான வருஷங்களாக மக்கள் கற்றாழையை பயன்படுத்தி வருகிறார்கள். கற்றாழையின் நடுவில் இருக்கும் ஷெல் தான் நாம் பயன்படுத்த வேண்டும். சுற்றி இருக்கும் முள், தோள் ஆகியவற்றை கீழே எடுத்துப் போட்டுவிட வேண்டும்.




கற்றாழையில் உள்ள ஏகப்பட்ட மருத்துவ குணங்கள்

  1. உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் இந்த கற்றாழையில் உள்ளது.
  2. கற்றாழை நாம் சாப்பிடும் சாப்பாட்டை நன்கு செரிக்க வைப்பதுடன் சாப்பாட்டில் உள்ள சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளவும் செய்கிறது. அதே சமயம் சாப்பாட்டில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றவும் செய்கிறது.
  3. கற்றாழையை வைத்து நிறைய அழகு சாதனப் பொருள்கள் செய்கிறார்கள். உதாரணத்திற்கு சோப்பு, முக க்ரீம், பேஸ் வாஷ் ஆகியவை ஆகும். இவையெல்லாம் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை சரி செய்ய உதவுகிறது. வீட்டில் கற்றாழை செடி வளர்த்து வந்தால் நாமும் கற்றாழையின் நடுவில் இருக்கும் ஷெல்லை எடுத்து முகத்தில் தடவிக் கொள்ளலாம். மேலும் அதை அப்படியே எடுத்து சாப்பிடவும் செய்யலாம்.
  4. கற்றாழை முடி வளர்ச்சிக்கும் முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கும் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். கற்றாழை ஷாம்ப், கண்டிஷனர் ஆகியவையும் கற்றாழையை வைத்து தயாரிக்கப்படுகிறது. அதை வாங்கி தலையில் தேய்த்து குளித்தால் முடி கொட்டும் பிரச்சனையும் சரியாகிவிடும்.
  5. சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் கற்றாழை உதவுகிறது.
  6. பல் ஊண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும், பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் கற்றாழை உபயோகத்தினால் சரி ஆகிவிடும். கற்றாழையில் டூத் பேஸ்ட் செய்து விற்கிறார்கள். அதையும் வாங்கி உபயோகப்படுத்தலாம்.
  7. கேன்சர் நோய் வருவதைத் தடுக்கும் குணமும் கற்றாழையில் இருக்கிறது.
  8. உடல் சூட்டை தணிக்க கற்றாழை ஒரு நல்ல மருந்தாக இருக்கும்.
  9. கற்றாழை உடம்பில் உண்டாகும் காயங்களையும் குணப்படுத்தும்.
  10. கற்றாழையில் லேகியம் அல்லது ஜூஸ் செய்து சாப்பிட்டால் மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் வயிற்று வலி சரியாகிவிடும். கற்றாழையானது நமக்கு மிகப் பெரிய நன்மைகளை தருகிறது. இத்தகைய நன்மைகளைத் தரும் கற்றாழையை பயன்படுத்தி நாம் ஆரோக்கிய வாழ்க்கையை வாழலாம்.















கற்றாழை நமக்கு கடவுள் கொடுத்த ஒரு வரப்பிரசாதம்|கற்றாழையில் உள்ள ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் கற்றாழை நமக்கு கடவுள் கொடுத்த ஒரு வரப்பிரசாதம்|கற்றாழையில் உள்ள ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் Reviewed by Latha Gopinath on June 23, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.