வெந்தயத்தின் 10 வகையான மருத்துவ நலன்கள்
- பிறந்த குழந்தைக்கு மிகவும் அத்தியாவசியம் ஆனதும், குழந்தை வளர்ச்சிக்கும் தாய்ப்பால் மிகவும் தேவையானது. அந்த தாய்ப்பால் போதுமான அளவு சிலருக்கு சுரப்பதில்லை. அந்த தாய்ப்பாலை சுரக்கவைப்பதற்கு இயற்கையான ஒரு மருந்து வெந்தயம்.
- மேலும் வெந்தயமானது ஆண்களுக்கு டெஸ்டோசீரோன் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.
- சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்திலுள்ள கெட்ட சர்க்கரையின் அளவை குறைக்கிறது. இன்சுலின் ஹார்மோன் வேலை பார்க்கும் திறனை கூட்டுவதற்கும் வெந்தயம் உதவி செய்கிறது.
- வெந்தயத்தில் நிறைய சத்துக்கள் மிகுந்திருப்பதால் ஆண்கள் பெண்கள் இருவர்க்கும் முடி வளர உதவி செய்கிறது. வெந்தயத்தை பொடி செய்து சாப்பிடலாம். அப்படி இல்லையென்றால் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்து முழுங்கிவிடலாம்.
- மேலும் வெந்தயத்தை நன்கு ஊற வைத்து அரைத்து மயிர்கால்களில் தடவி 2 மணிநேரம் ஊற வைத்து குளித்து வந்தால் தலையில் ஏற்படும் பொடுகு அரிப்பு பிரச்சனையும் சரி செய்யப்பட்டு உடல் நன்கு குளிர்ச்சி அடைந்துவிடும். முடியும் நன்கு வளரும்.
- வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அதிக அளவு பசியை குறைத்து உடல் எடை குறையவும் உதவி செய்கிறது.
- ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது.
- மலச்சிக்கலையும் போக்குகிறது.
- வெந்தயம் உடல் சூட்டையும் தணிக்கிறது.
- வெந்தயம் நன்கு உடலை குளிர்ச்சி அடையச் செய்கிறது.
வெந்தயத்தை எப்படி சாப்பிடுவது
தினமும் வெந்தயத்தை வறுத்து பொடி செய்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம்.
இல்லையென்றால் வெந்தயத்தை அப்படியே வாயில் போட்டு தண்ணீர் குடிக்கலாம். வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து நன்கு உடல் குளிர்ச்சி அடைந்து எந்தவித உடல் உபாதைகளும் இன்றி உடல் சூப்பராக இருக்கும். எனவெ வெந்தயத்தை அவசியம் சாப்பிட வேண்டும்.
வெந்தயம் சாப்பிடுவதால் நம் உடம்பிற்கு ஏற்படும் நன்மைகள்
Reviewed by Latha Gopinath
on
June 23, 2019
Rating:
No comments: