துளசி செடியில் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளன. அனைவரும் துளசி இலையை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. கோயிலில் துளசி இலையை பறித்து மாலையாக கட்டி பெருமாளுக்கு சாத்துவார்கள். அதை பக்தர்களுக்கு பிரசாதமாகவும் கொடுப்பார்கள். அத்தகைய புனிதம் மற்றும் சிறப்பும் வாய்ந்தது இந்த துளசி இலை. வீடுகளில் துளசி மாடம் வைத்து அதில் துளசி செடியை வளர்த்து அதை தினமும் வழிபட்டும் வருவார்கள். நல்ல மணமாகவும், சாப்பிடுவதற்கு மிகவும் பிடித்தமானதாகவும் இந்த துளசி இலை இருக்கும். இதை உணவிலும் சேர்த்துக் கொள்வார்கள். துளசி இலையை முகர்ந்து பார்த்தால் நல்ல நறுமணத்துடனும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். குழந்தைகளும் விரும்பி உண்பார்கள். துளசி இலையில் கசாயம் செய்து குடிப்பார்கள். மருந்துக் கடைகளில் இருமலுக்கு துளசி டானிக்கும் கிடைக்கும்.
துளசியின் மருத்துவக் குணங்கள்
- துளசியில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக உள்ளது.
- இருமல், சளி, ஆஸ்த்துமா, காய்ச்சல் உள்ளவர்களுக்கு துளசி ஒரு நல்ல மருந்து.
- மூட்டு வலி, மூட்டில் வீக்கம் இருப்பவர்களும் துளசி இலையை பயன்படுத்தலாம்.
- ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள் துளசி இலையில் அதிகம் உள்ளது.
- சீக்கிரமே வயது முதிர்ச்சி அடைய விடாமல் துளசி இலை தடுக்கிறது.
- இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு துளசி இலை மிகவும் உகந்தது.
- ஒரு சில கேன்சர் வகைகளை தடுக்கும் ஆற்றலும் துளசி செடிக்கு உண்டு.
- சிறுநீரகக் கற்கள் இருப்பவர்களும் துளசி இலையை சாப்பிட்டு வரலாம்.
- துளசி டீ. துளசி கசாயம் செய்து சளி, இருமல் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடலாம்.
துளசி செடியின் அற்புத பலன்கள்
Reviewed by Latha Gopinath
on
June 23, 2019
Rating:
Reviewed by Latha Gopinath
on
June 23, 2019
Rating:

No comments: