காலம் பொன் போன்றது என்று எதனால் கூறுகிறோம்


ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் காலநேரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் யாருடன் நேரத்தை செலவழிக்கிறோம், எப்படி செலவழிக்கிறோம், என்ன காரணத்திற்காக செலவழிக்கிறோம் என்பது அனைத்துமே மிக முக்கியம். நாளை என்பது நம் அனைவர்க்கும் ஒரு முக்கிய எதிரி. தினமும் நாளை வருவதால் நாம் இன்றைக்குரிய வேலையை நாளைக்கு நாளைக்கு என்று தள்ளி வைத்துவிடுகிறோம். காலம் பொன் போன்றது என்பதால் நாம் யாருடன் காலநேரத்தை செலவழிக்கிறோம் என்பது மிக முக்கியம். நாம் பிடித்தவர்களுடன் பிடித்தவாறு நம்முடைய பொன்னான நேரத்தை செலவிட வேண்டும்.






ஒரு மனிதனின் வாழ்க்கையில் காலம் எவ்வளவு முக்கியமானது அதை எப்படி புத்திசாலித்தனமாக செலவிடுவது என்பதைப் பார்க்கலாம்

  1. நேரம் ஒரு தடவை முடிந்துவிட்டது என்றால் அது திரும்பி வராது. அதை நாம் உணர்ந்து கொள்வதற்கு முன்பாகவே காலம் கடந்தோடிவிடும். கடந்து போன பிறகு ஐயோ நேரம் ஓடிவிட்டதே என்று நாம் வருந்துவதில் பயன் இல்லை.
  2. காலம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பதால் அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறுவதும் அப்படி இல்லை என்றால் அவரவர் விருப்பம் போல் நேரத்தை வீணடித்துவிட்டு அதனால் வாழ்க்கையையே தொலைத்துவிட்டு சிரமப்படுவதும் அவரவர் கையில் தான் உள்ளது.
  3. நாம் நேரத்தை நல்ல முறையில் செலவழித்து விட்டால் நம்முடைய எதிர்காலத்தில் எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நிம்மதியாக வாழலாம்.
  4. ஒரு சில பிரச்சனைகளை குறிப்பிட்ட நேரத்தில் முடித்துவிட வேண்டும். பிறகு பார்க்கலாம் என்று மெத்தனமாக இருந்துவிட்டால் நிலமை கை மீறி போய்விடும்.
  5. ஒருவருடன் நம்முடைய பொன்னான நேரத்தை நாம் செலவிடுவதுதான் அது அவர்களுக்கு நாம் கொடுக்கும் விலை உயரந்த பரிசாக இருக்கும். எனவே இந்த பரபரப்பான வாழ்க்கையில் நம்முடைய நண்பர்களுக்காகவும், நம்முடைய குடும்பதார்களுக்காகவும் நம்முடைய நேரத்தை அவர்களுடன் செலவழிக்க வேண்டும்.
  6. மேலும் ஒருவர் நமக்கு தீங்கு செய்தால் நாம் தக்க நேரம் வரும்வரை பொறுத்திருந்து உரிய நேரத்தில் அவர்களுக்கு நல்ல பாடம் புகட்டிவிட வேண்டும்.











காலம் பொன் போன்றது என்று எதனால் கூறுகிறோம் காலம் பொன் போன்றது என்று எதனால் கூறுகிறோம் Reviewed by Latha Gopinath on June 23, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.