வெள்ளை சர்க்கரை எனப்படும் சீனியின் உபயோகத்தை எப்படி குறைப்பது |சீனிக்குப் பதிலாக பயன்படுத்துவது


சர்க்கரையின் உபயோகம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேபோகிறது. சர்க்கரை இல்லாமல் பெரும்பாலான மக்களால் வாழ்க்கை நடத்தவே முடியாது என்ற நிலை வந்து விட்டது. நாம் அன்றாடம் குடிக்கும் காபி, டீ மற்றும் குளிர் பானங்கள் அதைத்தவிர சர்க்கரை சேர்த்து செய்யப்படும் இனிப்பு வகைகள் ஆகியவற்றை நாம் அதிகமாக எடுத்துக் கொள்கிறோம். வயதானவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவர்க்கும் சீனி சேர்க்கும் பழக்கம் வந்துவிட்டது. சில உணவுகளில் இயற்கையாகவே சர்க்கரை உள்ளது. உதாரணத்திற்கு பால் மற்றும் பழங்கள். அதைத்தவிர ஒரு சில உணவுகளில் இனிப்பு இல்லாத சர்க்கரை உள்ளது. உதாரணத்திற்கு அரிசிவகைகள்.




சர்க்கரைக்குப் பதிலாக வேறு என்னென்ன உணவில் சேர்த்து சாப்பிடலாம்

இப்பொழுது சர்க்கரைக்குப் பதிலாக நாம் எவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதைப் பார்க்கலாம்.

  1. தேன்
  2. கருப்பட்டி
  3. பணங்கற்கண்டு
  4. வெல்லம்
  5. மேப்பிள் சிரப்
  6. பேரிச்சம்பழம் முதலியன

எப்படி சர்க்கரையின் பயன்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பது

சர்க்கரைக்குப் பதிலாக மேலே கூறப்பட்டுள்ள பொருள்களை காபி, டீ, ஜூஸ். ஸ்மூத்தி, இனிப்பு வகைகள் ஆகிய எல்லாவற்றிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கடையில் விற்கும் கூல்டிரிங்ஸ்யில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால் நாம் அதை விட்டுவிட்டு வீட்டிலேயே ஜூஸ் செய்து சாப்பிடுவது நல்லது.
சர்க்கரை அதிகம் உள்ள சாதம், பிரட் முதலியவற்றை குறைத்துக் கொள்வது நல்லது.

சர்க்கரையின் பயன்பாடு அதிகமானால் உடலுக்கு ஏற்படும் தீமைகள்

சர்க்கரை அதிகம் சேர்க்கப்படும் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் உண்டாகும்.
உடல் பருமன் உண்டானால் கொலஸ்ட்ரால், இதயநோய், இரத்த அழுத்தம் ஆகியவை உண்டாகும் ஆபத்தும் உள்ளது.
கூடவே சர்க்க்கரை நோயும் வந்துவிடும். எனவே குறைத்துக் கொள்வது அவசியம்.











வெள்ளை சர்க்கரை எனப்படும் சீனியின் உபயோகத்தை எப்படி குறைப்பது |சீனிக்குப் பதிலாக பயன்படுத்துவது வெள்ளை சர்க்கரை எனப்படும் சீனியின் உபயோகத்தை எப்படி குறைப்பது |சீனிக்குப் பதிலாக பயன்படுத்துவது Reviewed by Latha Gopinath on June 23, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.