நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் |நெல்லிக்காயின் மருத்துவக் குணங்கள்


             நெல்லிக்காய் என்பது ஒரு துவர்ப்பு நிறைந்த சத்தான பழம். இதை இந்திய நெல்லிக்காய் என்று கூறுவார்கள். பழுப்பு பச்சை நிறத்தில் காணப்படும் இந்த பழத்தை உப்பு மற்றும் மிளகாய்தூள் தொட்டு சாப்பிடுவார்கள். மேலும் பெரும்பாலான மக்கள் நெல்லிக்காயில் ஊறுகாய் செய்தும் சாப்பிடுவார்கள். நெல்லிக்காயை வெறுமனே கடித்து தின்றுவிட்டு சிறிது நேரம் கழித்து தண்ணீர் குடித்தால் நல்ல இனிப்பாக இருக்கும். இந்த நெல்லிக்காயில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமீன் C மற்றும் வைட்டமீன் A சத்தும் நிறைந்துள்ளது. அதைத்தவிர இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து முதலிய சத்துக்களும் நிறைந்துள்ளன.




நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்

  1. நெல்லிக்காயில் வைட்டமீன் C , வைட்டமீன் A சத்துக்கள் நிறைந்திருப்பதால் அது உடம்பில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை கூட்டுகிறது.
  2. நெல்லிக்காயை சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. எனவே நீரழிவு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது.
  3. மேலும் நெல்லிக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் அது ஜீரணசக்தியை அதிகரித்து பசியையும் கூட்டுகிறது.
  4. நெல்லிக்காய் சாப்பிடுவதால் தலைமுடி நன்றாக கருமை நிறத்துடன் வளருவதுடன் நன்கு வலிமையும் அடையும். நெல்லிக்காயை சேர்த்து எண்ணெய் செய்து கடையில் விற்கிறார்கள் அதை வாங்கி முடியில் தடவி வருவதும் நல்லது. இல்லை என்றால் செம்பருத்தி நெல்லிக்காய் சேர்த்து வீட்டிலேயே எண்ணெய் செய்தும் தலையில் தடவிக் கொள்ளலாம்.
  5. நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு கழிந்து அதனால் உடலில் உள்ள கெட்டது எல்லாம் வெளியேறி கிட்னியையும் பாதுகாப்பு அடையச் செய்கிறது.
  6. கொஞ்ச வயதிலேயே வயது முதிர்ச்சியான தோற்றத்தை அடைய விடாமல் இந்த நெல்லிக்காய் தடுக்கிறது. மூஞ்சில் ஏற்படும் சுருக்கத்தை நீக்கி தோற்றம் இளமை பொழிவுடன் இருக்கும் படி செய்கிறது.
  7. வைட்டமீன் A சத்து நிறைந்திருப்பதால் இது கண் பார்வைக்கும் நல்லது.
  8. கால்சியம் சத்தானது உடம்பிலுள்ள பல் எலும்புகளுக்கு மிகவும் அவசியம். நம் உடம்பானது கால்சியம் சத்தை உறிஞ்சிக் கொள்வதற்கு இந்த நெல்லிக்காய் பெரிதும் உதவுகிறது.

நெல்லிக்காயை எப்படி சாப்பிடுவது

  1. நெல்லிக்காயை அப்படியே வாங்கியவுடன் பிரஸ் ஆக கடித்தோ, அல்லது ஜூஸ் செய்தோ சாப்பிடலாம்.
  2. அப்படி இல்லை என்றால் கடையில் விற்கும் நெல்லிக்காய் ஜூஸ் அல்லது நெல்லிக்காய் பவுடரையோ வாங்கி சாப்பிடலாம்.
  3. கடையில் விற்கும் நெல்லிக்காய் சேர்த்து செய்த எண்ணெய்யையோ அல்லது வீட்டிலேயே நெல்லிக்காய் எண்ணெய் செய்தும் தலைமுடியில் தடவிக் கொள்ளலாம்.
  4. சிறு குழந்தைகள் நெல்லிக்காயை அதிகம் சாப்பிடமாட்டார்கள். அவர்களுக்கு காய்ந்த நெல்லிக்காயில் இனிப்பு சேர்த்து சுவையாக கடையில் விற்பார்கள். அதை வாங்கி கொடுக்கலாம்.











நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் |நெல்லிக்காயின் மருத்துவக் குணங்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் |நெல்லிக்காயின் மருத்துவக் குணங்கள் Reviewed by Latha Gopinath on June 23, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.