நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை எப்படி வளர்த்துக் கொள்வது| நம்மால் எதையும் சாதிக்க முடியும்


      இந்த உலகத்தில் உள்ள அனைவரும் திறமை வாய்ந்தவர்கள் என்று நம்புகிறீர்களா இந்த கேள்வியை நீங்கள் யாரிடமாவது கேட்டுப் பார்த்தால் சிலர் கூறுவார்கள் ஆம் அது உண்மை தான். இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு தனித்திறமை உள்ளது என்பார்கள். நாம் அதை வெளிக்கொண்டு வர விடாமுயற்சியுடனும், கடின உழைப்புடனும் செயல்பட வேண்டும்.

       ஆனால் சிலர் கூறுவார்கள், திறமை என்பது தனித்தன்மை கொண்ட விசயம். அதனால் அனைவர்க்கும் திறமை இருக்காது. திறமை உள்ளவர்கள் சாதித்து இருக்கிறார்கள். இனிமேலும் சாதனை புரிவார்கள் என்பார்கள். இதை எல்லாம் விட்டுவிடுங்கள்.

      நாம் இப்பொழுது ஒரு பொறுப்பு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அனைவரும் அவர்களுடைய அன்றாட கடமையை நிறைவேற்ற அல்லும் பகலும் அரும்பாடுபட்டு ஓடித்திரிகிறார்கள். இப்படி அன்றாட வாழ்வில் சிக்கித்தவிக்கும் ஒருவனிடம் உன்னுடைய திறமையைக் காட்டு என்று கூறினால் அவன் சில நிமிடம் யோசித்துவிட்டு என்னிடம் திறமையே இல்லையே நான் ஒரு சாதாரண மனிதன் என்று கூறுவான். உனக்கு எது நன்றாக தெரியுமோ எதில் ஆர்வம் இருக்கிறதோ அதை செய் என்று கேட்டால் சரியாக இருக்கும்.

       இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால் நாம் நம்மை முழுமையாக நம்புவது இல்லை. நம் அனைவரிடமும் திறமை உள்ளது. அப்படி இல்லை என்றாலும் ஆர்வம் இருந்தால் வளர்த்துக் கொள்ள முடியும். வெற்றி பெறுவதற்கு முதல் படி நம்மை நாம் நம்புவது தான்.






நம்மை நாம் நம்புவதற்கு என்னென்ன வழிகளை பின்பற்ற வேண்டும் என்பதை இனி பார்ப்போம்

  1. முதலில் நம்மை நாமே நேசிக்க வேண்டும். நாம் இது தான் என்பதை ஏற்றுக் கொள்ள பழக வேண்டும்.
  2. பிறகு நம்முடைய தன்னம்பிக்கையை இழக்கும்படியாக செயல்கள் செய்பவர்களை நாம் வாழ்க்கையிலிருந்து விலக்கி வைக்க வேண்டும்.
  3. நம்மை யாராலும் எதனாலும் தடுக்க முடியாது என்பதை ஆனித்தரமாக நம்ப வேண்டும்.
  4. நமக்கு கிடைக்க வேண்டியது நமக்கு கிடைத்தே தீரும். நமக்குரியது யார் தடுத்தாலும் நம்மிடம் வந்தே தீரும்.
  5. எந்த நிலையிலும், எக்காரணத்திற்கும் நம்மை பிறரோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. அவர்கள் எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும் சரி.
  6. எந்த ஒரு விசயத்தையும் அது எவ்வளவு கடினமான செயலாக இருந்தாலும் நாம் அதை முயற்சி செய்து பார்க்காமல் நம்மால் முடியாது என்று விட்டுவிடக் கூடாது.
  7. நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு அனுபவத்திலிருந்தும் நாம் அனைத்து விசயத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
  8. தோல்வியை திரும்பிப் பார்க்காமல் முன்னேறி சென்று கொண்டே இருக்க வேண்டும்.
  9. சவால்கள் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் நம்முடைய மன உறுதியையும், விடா முயற்சியையும், தைரியத்தையும் விட்டுவிடக் கூடாது.
  10. வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களைப் பார்த்து நாம் அவர்கள் கொள்கையை பின்பற்றக் கூடாது. நமக்கென்று ஒரு தனிக்கொள்கையை வைத்து அதை பின்பற்றி நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
  11. அடுத்தவர்கள் கருத்துக்கள் உங்களை ஆளக்கூடாது. உங்கள் மனசு என்ன சொல்கிறதோ அதையையே நீங்கள் கேட்டு வெற்றி பெற வேண்டும்.
  12. அடுத்தவர்களுடைய தோல்வியை உங்களுடைய எண்ணத்தில் திணிப்பார்கள் அதைக் கேட்டு நீங்கள் எந்த செயலையும் முயற்சி செய்யாமல் முடியாது என்று விட்டுவிடக் கூடாது.
  13. இவ்வளவு நேரம் சொன்ன பாண்ட்கள் அனைத்தையும் உங்களால் ஒரே நாளில் செயல்படுத்த முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக விடாமுயற்சியுடன் முயன்று செயல்படுத்தி உங்களால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று நம்பி வெற்றி காணுங்கள்.




நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை எப்படி வளர்த்துக் கொள்வது வீடியோ









நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை எப்படி வளர்த்துக் கொள்வது| நம்மால் எதையும் சாதிக்க முடியும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை எப்படி வளர்த்துக் கொள்வது| நம்மால் எதையும் சாதிக்க முடியும் Reviewed by Latha Gopinath on June 12, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.