குங்குமப்பூவில் உள்ள மருத்துவ குணங்கள்
- குங்குமப்பூவை மக்கள் நல்ல நறுமணத்திற்காகவும், நல்ல நிறத்திற்காகவும், நல்ல ருசிக்காகவும் இனிப்பு வகைகளிலும், பிரியாணி வகைகளிலும், குல்பி, மற்றும் பாதாம் பால் ஆகியவற்றிலும் அதிகம் சேர்த்துக் கொள்கின்றனர்.
- குங்குமப்பூவை சிறிதளவு பால் சேர்த்து ஊற வைத்து உணவில் சேர்த்தால் நல்ல மஞ்சள் நிறம் கிடைக்கும்.
- குங்குமப்பூவில் ஆன்டி – ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. அது ஞாபக சக்தியையும், கற்றுக் கொள்ளும் திறனையும் கூட்டுகிறது.
- இந்த குங்குமப்பூவானது மன உளைச்சலில் உள்ளவர்களை அதிலிருந்து மீண்டு வந்து நல்ல புத்துணர்ச்சி பெற உதவுகிறது..
- புற்றுநோய் உள்ளவர்கள் குங்குமப்பூவை சாப்பிட்டு வருவது நல்லது. அப்படி சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் படிப்படியாக குணமடைய வாய்ப்பு உள்ளது. மேலும் புற்றுநோயை உண்டாக்கும் செல்களையும் அழிக்க உதவுகிறது.
- அதிக குண்டாக இருப்பவர்கள் குங்குமப்பூவை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு உண்டாகும் அதிக பசி குறைவதுடன் உடல் எடையும் குறைந்துவிடும்.
- ஞாபக மறதி சம்மந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் குங்குமப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அந்த நோய்யிலிருந்து விடுபட்டு வரவும் வாய்ப்பு உள்ளது.
- அடுத்ததாக குங்குமப்பூவானது தலைமுடி வளரவும், வழுக்கை உள்ளவர்க்கு புது முடி வளரவும் உதவுகிறது.
- கர்ப்பகாலத்தில் இருக்கும் பெண்கள் குங்குமப்பூவை தொடர்ந்து பாலில் போட்டு குடித்து வந்தால் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல நிறமாகவும், முகப்பொழிவுடனும் பிறக்கும் என்பது தமிழ்நாட்டில் ஒரு ஐதீகம்.
- மேலும் குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து அதை முகத்தில் பூசி வந்தால் சருமம் வழுவழுப்பாகவும், நல்ல பொழிவாகவும், கூடுதல் நிறமுடனும் மாறிவிடும்.
குங்குமப்பூ சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் வீடியோ
குங்குமப்பூ சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் |குங்குமப்பூவில் இவ்வளவு நன்மைகளா
Reviewed by Latha Gopinath
on
June 12, 2019
Rating:
No comments: