உடல் சூடு எதனால் வருகிறது
- உடலில் சூடு அதிகமாவதற்கு பல காரணங்கள் உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலோ அல்லது வெயிலில் அதிக நேரம் நின்று வேலை பார்த்தாலோ உடலில் சூடு அதிகமாகிறது.
- எண்ணெய் அதிகமாகவும், காரம் அதிகமாகவும் உள்ள உணவுகளை சாப்பிடுவதாலும் மேலும் பொறித்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதாலும் உடலில் சூடு உண்டாகிறது.
- தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருந்தால் உடம்பில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அந்த சமயத்திலும் உடல் சூடு அதிகரித்துவிடும்.
- இதைத்தவிர ஒரு சில உடல் உபாதை உள்ளவர்களுக்கும், சில வகை மருந்துகளை தினசரி எடுத்துக் கொள்பவர்களுக்கும் உடல் சூடு அதிகரிக்கலாம்.
- மிகவும் இறுக்கமான சிந்தடிக் உடைகளை அணிவதாலும் உடல் சூடு உண்டாகலாம்.
உடல் சூட்டை எப்படி குறைப்பது
- தண்ணீர் சத்து அதிகம் உள்ள காய்கறிகளும் பழங்களும் சாப்பிட வேண்டும். உதாரணதிற்கு தண்ணீர் பழம்,வெள்ளரிக்காய், காலிபிளவர்.
- தினமும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
- இளநீர் குடிப்பது சூட்டை நன்கு தணிக்கும். எனவே கோடைகாலங்களில் இளநீர் அதிகம் குடிக்க வேண்டும்.
- கற்றாழை உடல் சூட்டை தணிக்க மற்றொரு வழி. கற்றாழையில் நடுவில் இருக்கும் வெள்ளை பகுதியை சிறிதளவு சாப்பிடுவதாலும், உடம்பில் தடவிக் கொள்வதாலும் உடல் சூடு தணிந்துவிடும்.
- மோர், லெசி போன்ற குளிர் பானங்களை பருகுவதாலும் உடல் சூடு குறைகிறது, கட்டாயம் மோர் தயிரை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்தோ வறுத்து பொடி செய்தோ சாப்பிட்டாலும் உடல் சூடு குறைந்துவிடும்.
- லூசான ,லைட் கலர் ஆடை உடுத்துவதாலும் உடல் சூடு குறைந்துவிடும்.
- புதினா, எலுமிச்சம்பழம் சேர்த்து குளிர்பானங்கள் செய்து குடிப்பதாலும் உடல் சூடு குறைந்துவிடும்.
- வெயில் காலங்களில் வெளியே செல்லும் போது குடை பிடித்தும், கண்ணுக்கு இதமான கண்ணாடி அணிந்தும் செல்லலாம்.
வெயில் காலங்களில் நம் உடம்பை எப்படி கவனித்து கொள்வது வீடியோ
வெயில் காலங்களில் நம் உடம்பை எப்படி கவனித்து கொள்வது|உடல் சூட்டை எவ்வாறு குறைப்பது
Reviewed by Latha Gopinath
on
June 12, 2019
Rating:
No comments: