டார்க் சாக்லேட் கோகொ மரத்தின் கொட்டையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சாக்லேட் என்றாலே உடலுக்கு தீங்கு என்று பலரும் நம்புகின்றனர். ஆனால் இந்த டார்க் சாக்லேட்டில் கோகொவின் அளவு அதிகமாக இருப்பதால் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ள உணவுகளுள் இதுவே முதன்மையானது. அதைத்தவிர மினரல், இரும்புச்சத்து, மேக்னிசியம் சத்துக்களும் உள்ளது.
டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
- இந்த டார்க் சாக்லேட்டில் பல வகையான சக்தி வாய்ந்த ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
- உயர் இரத்த அழுத்தத்தை படிப்படியாக குறைக்க உதவுகிறது.
- கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது.
- டார்க் சாக்லேட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய நோய் வரும் அபாயம் குறைகிறது.
- மூளை செயல்பாட்டிற்கு உதவுகிறது.
- புற்று நோய் வருவதைத் தடுக்க உதவுகிறது.
- டார்க் சாக்லேட்டை சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கிறது.
டார்க் சாக்லேட்டில் நன்மைகள் வீடியோ
டார்க் சாக்லேட்டில் இவ்வளவு நன்மைகளா| டார்க் சாக்லேட்டின் ஆரோக்கிய நன்மைகள்
Reviewed by Latha Gopinath
on
June 12, 2019
Rating:
No comments: